×

அந்த போட்டிகளில் விராட் கோலிதான் நம்பர் 1… புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான்!

ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 வீரர் என்றால் அது விராட்கோலிதான் என கூறியுள்ளார்.

 

ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 வீரர் என்றால் அது விராட்கோலிதான் என கூறியுள்ளார்.

உலகக் கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது துபாயில் ஐபிஎல் போட்டிகளுக்காக கூடியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் போட்டிக்காக தீவிரப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் இன்ஸ்டாகிராம் உரையாடலில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

அந்த உரையாடலின் போது ‘உலகின் சிறந்த ஒருநாள் வீரர்?’ என்று கேட்டதற்கு ‘இப்போதைக்கு விராட் கோலி’ என பதில் சொல்லியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தே கோலியை இப்படி புகழ்ந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News