×

விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல் அரைசதம்: ஒருநாள் தொடரிலும் சாதிக்குமா இந்திய அணி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று தொடங்கிய நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சற்று முன்னர் ஹமில்டன் மைதானத்தில் தொடங்கியது 

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று தொடங்கிய நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சற்று முன்னர் ஹமில்டன் மைதானத்தில் தொடங்கியது 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிபி ஷா 20 ரன்களிலும், மயங்க் அகர்வால் 32 ரன்களிலும் அவுட் ஆகினர் 

இதனை அடுத்து விராத் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் நல்ல முறையில் விளையாடி ரன்களை குவித்து கொண்டிருந்த நிலையில் விராட்கோலி 51 ரன்களில் அவுட்டானார். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடி வருகின்றனர். ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி சற்று முன் வரை 31 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் முடிந்த டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றது போல், ஒருநாள் தொடரிலும் இந்திய அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றும் என்று கருதப்படுகிறது
 

From around the web

Trending Videos

Tamilnadu News