அதிக சொத்து வைத்துள்ள இந்திய பிரபலம்.... விராட் கோலி முதலிடம் - எத்தனை கோடி தெரியுமா?
Jun 9, 2026, 20:47 IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவருமான விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது .
கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிரபல நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு வாமிகா, அக்காய் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,

சமீபத்தில் இந்திய அளவில் அதிக சொத்து வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இவரிடம் 3.542 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்துபோய் உள்ளனர்.
