Categories: Cinema News latest news

கார்த்தியை அருகில் வைத்துக்கொண்டே ஷங்கர் மகள் செய்த வேலை.. திருதிருவென விழித்த விருமன்.!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.  இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சூர்யா, கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் முத்தையா, இயக்குனர் ஷங்கர் மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் என பலரும்  மதுரைக்கு வந்திருந்தனர்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இந்த விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது சூர்யாவின் பெயரை தொகுப்பாளர் கூறியதும் ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என அரங்கம் அதிர சத்தம் போட ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படியுங்களேன் – பாலிவுட்டில் விஜய் சேதுபதியால் வந்த குழப்பம்… மும்பைக்கு பறந்த நயன்தாரா பிரபலம்.!

அப்போது கார்த்தி அருகில் இருந்த அதிதி ஷங்கரும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என , தான் இந்த படத்தில் ஹீரோயின் அருகில் இருப்பது தன் பட ஹீரோ கார்த்தி என எதையும் அறியாமல் தானும் ஒரு ரசிகையாக கொண்டாடிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Manikandan
Published by
Manikandan