Categories: Cinema News latest news

கஞ்சாப்பூ கண்ணாலே பாடலாசிரியர் யார் தெரியுமா…? மேடையில் ஏற்றாதது ஏன்…? அவர் நிலைமையை பாருங்க…

முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவான படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்க அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், சூரி உட்பட பலரும் நடித்திருந்த இப்படம்
ஒரு கிராமத்து பின்னனியில் உருவாக்கப்பட்டது. படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் உள்ள கஞ்சாப்பூ கண்ணாலே என்ற பாடம் பட்டி தொட்டியெல்லாம் மிகவும் பிரபலமடைந்து சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த பாட்டுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவாக போட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி பிரபலமடைந்த இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் மணிமாறன் என்னும் மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதர். இவர் கிட்டத்தட்ட 5 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு கலைக்குழுவில் சேர்ந்து ஊர் ஊராக நாடகம் நடிப்பது, பாடுவது என தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடிப்படையில் இவர் ஒரு காய்கறி வியாபாரி. இப்பவும் இந்த படம் வந்த பிறகும் கூட அவர் சொந்த ஊரில் வியாபாரம் தான் பார்த்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்கள் : விக்ரம் ரசிகர்களுக்கு இது ஒன்னும் புதுசில்ல… பெரிய எதிர்பார்ப்பு சுமார் வெற்றி… ஷாக்கிங் லிஸ்ட் இதோ…

சென்னை வந்தால் வாய்ப்புகள் வருமே எனக் கேட்டால் வியாபாரம் போயிரும் மேலும் இந்த வியாபாரத்தின் மூலம் வரும் ரூபாயை சேர்த்து வைத்து தான் சென்னைக்கே வருவேன் என்று கூறினார். மேலும் இந்த பாடல் இவ்ளோ பிரபலமடைந்தும் விருமன் ஆடியோ லாஞ்சில் உங்களை மேடையேற்றவில்லையே என கேட்டதற்கு வேண்டுமென்றே அவர்கள் பண்ணவில்லை. மறந்திருக்கலாம்.

மேலும் எனக்கு இது தான் முதல் வாய்ப்பு. பத்திரிக்கையில் எல்லார் பேரும் போட்டு குறிப்பிட்ட நபர்களை மறந்துவிடுவோம் அதே மாதிரி தான் மறந்திருப்பார்கள் என்றும் வெற்றிவிழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசினேன் என்றும் வெகுளியாக பேசினார் மணி மாறன். இதில் முக்கியமாக கருத்தில் கொள்வது யுவன் சங்கர் ராஜா, சூர்யா ஆகியோரை இன்னும் நேரில் சந்தித்ததே இல்லையாம் மணிமாறன். மேலும் இதுவரை இயக்குனரை தவிர வேற யாரும் நேரில் வந்து இவரை பாராட்டவில்லையாம்.

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini