×

கொரோனா வைரஸ் மெஸேஜ்களில் வைரஸ் – ஹேக்கர்களின் கைவரிசை !

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதுகாப்புப் பற்றி வரும் பார்வேர்டு மெஸேஜ்களில் வைரஸ்களை ஹேக்கர்கள் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதுகாப்புப் பற்றி வரும் பார்வேர்டு மெஸேஜ்களில் வைரஸ்களை ஹேக்கர்கள் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பீதி கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இப்போது சீனா மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவுடனான தொடர்பை மற்ற நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ளன. முக்கியமாக சீனாவுக்கு செல்லும் விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதுவரை இந்த வைரஸுக்கு 259 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மக்களிடம் எழுந்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்கள் வேலைகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பாக பல வீடியோ மற்றும் டெக்ஸ்ட் பைல்கள் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் உலாவர ஆரம்பித்துள்ளது. அந்த மெஸேஜ்கள் மூலம் வைரஸ்களை ஹேக்கர்கள் அனுப்பி ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்ய முயலுவதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன.

இதுமாதிரி வைரஸ்களோடு பைல்களைக் கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. சம்மந்தப்பட்ட அந்த பைல்களின் எக்ஸ்டென்ஷன் .exe அல்லது .lnk  என்று குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பார்க்கவேண்டும். அப்படி இருந்தால் அவற்றை டவுன்லோட் செய்வதைத் தவிர்த்துவிடலாம் என வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News