×

விசாகப்பட்டிணம் ஆந்திர மாநிலம் வாயு கசிவு - உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி நிதியுதவி!

விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில் முதல்வர் அறிவித்துள்ளார்.

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் தனியார் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வாயுக்கசிவானது அப்பகுதியில் சுமார் 3 கிமீ தொலைவுக்கு பரவியுள்ளதால், பொதுமக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் ஈரம் தோய்ந்த முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாயுக்கசிவுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டதுடன், ஹெலிக்காப்டர் மூலம் விசாகப்பட்டிணம் சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்ற அவர், பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில், வாயுக்கசிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.10 லட்சம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம், மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

மேலும், பாதிப்புக்கு உள்ளான கிராமத்தை சேர்ந்த மக்கள் சுமார் 15,000 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். வாயுக்கசிவால் உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் எனவும் ஜெகன் அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News