பாக்கியராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட வராத விஷால்!.. அஞ்சலியுடன் டூயட் பாட்டு ரிலீஸ்!..

 
vishal

இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் மறைவுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டார். நயன்தாரா, கோவை சரளா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என அதிகளவில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வராத பிரபலங்களே வந்தனர்.

ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், சிவகுமார், கவுண்டமணி, தனுஷ், தேவா, ஸ்ரீகாந்த், சிவகார்த்திகேயன் என ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் வந்த நிலையில், விஷால் ஏன் வரவில்லை என கேள்விகள் கிளம்பின. 

ஆனால், அதெல்லாம் விட்டு விட்டு நடிகர் விஷால் மற்றும் நடிகை அஞ்சலி இணைந்து நடித்துள்ள 'மகுடம்' திரைப்படத்தின் புதிய பாடலான 'நச்சிந்தி மச்சானே' பாடலை விஷால் தற்போது வெளியிட்டுள்ளார். விஷாலின் இந்த செயலை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். 

அது ஒரு புறமிருக்க, பாடலை பற்றி பார்த்தால், மக்கள் ரசிக்கும் வகையில் உற்சாகமான இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலில், விஷால் மற்றும் அஞ்சலியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வண்ணமயமான காட்சிகள், நடன அமைப்பு மற்றும் கிராமத்து மணம் கலந்த காட்சிப்படுத்தல் ஆகியவை பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.

பாடலின் இசை, வரிகள் மற்றும் காட்சியமைப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, 'நச்சிந்தி மச்சானே' என்ற ஹூக் லைன் ரசிகர்களை எளிதில் கவரும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள 'மகுடம்' திரைப்படம் மீது இந்தப் பாடல் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் அப்டேட்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் படத்தின் புரமோஷனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

விஷால் - அஞ்சலி கூட்டணி மத கஜ ராஜா வெற்றிக்குப் பின் மீண்டும் திரையில் இணைந்திருப்பதால், 'மகுடம்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

From Around the web