Connect with us

Cinema News

நண்பர்கள் காலை வாரிவிட்ட விஷால்.! 25 நாள் மொத்தமாக வேஸ்ட்.!

கால்சீட் சொதப்பல் என்பது காலங்காலமாக தமிழ் சினிமா நடிகர்கள் சிலர் செய்து வருகின்ற தவறுகளில் முக்கியமான ஒன்றாகும். அந்த காலத்திலிருந்தே பலர் லிஸ்டில் இருக்கின்றனர். அதில் நமக்கெல்லாம் தெரிந்த நடிகர் என்றால் அது நம்ம சிம்பு தான்.

படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வர மாட்டார், அட்வான்ஸ் பணம் திரும்ப கிடைக்காது, படத்தை குறித்த நேரத்தில் வெளியிட முடியாது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கும் அளவிற்கு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதன் பிறகு சுதாரித்து கொண்ட சிம்பு, தனது போக்கை மாற்றி தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

ஆனால், நன்றாக இயங்கி கொண்டிருந்த விஷால் தற்போது சிம்பு போல கால்ஷீட் சொதப்ப ஆரம்பித்துள்ளார். ஆம் அவரது நண்பர் தயாரித்து விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் லத்தி.

இதையும் படியுங்களேன் – அவரை நம்பி போகாதீங்க.! உஷாராகிய மாஸ்டர் தயாரிப்பாளர்.! உண்மையில் மாஸ்டர் பிளான் தான்.!

இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என வெளியாக உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட கால்ஷீட்டில் சுமார் 25 நாட்களை விஷால் வீணடித்துள்ளாராம். சூட்டிங் எல்லாம் ரெடி செய்து படக்குழுவினர் வைத்து விஷாலுக்காக 25 நாட்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் கடைசி நேரத்தில் விஷால் படப்பிடிப்பிற்கு வரமாட்டாராம். இதனால் அன்றைய நாள் ஷூட்டிங் செலவு வீணாகி போனதுதான் மிச்சம். இப்படி 25 நாட்கள் நடந்துள்ளதாம். நண்பர்கள் படத்திலேயே இப்படி செய்தால் மற்ற தயாரிப்பாளர் படத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top