×

பிரபல தயாரிப்பாளர் மீது விஷால் புகார்... அதிர்ச்சியில் திரையுலகம்...

தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பின்னரும், ஆர்.பி.சௌத்ரி தான் அளித்த உறுதிமொழி பத்திரங்களை திருப்பி அளிக்கவில்லை என்று விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.   
 
83371840

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் R.B.சௌத்ரி, இவரின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் பல மெகா ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார், விக்ரமன், நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

இந்நிலையில் முன்னணி தயாரிப்பாளரான R.B.சௌத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்த விஷாலின் பதிவில், இரும்புத்திரை படத்தயாரிப்புக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் விஷால் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவர், தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களையும் ஆவணங்களையும் அளித்துள்ளார். இவற்றுக்கு பதிலாக அவருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறிது காலம் கழித்து நடிகர் விஷால் தான் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.  எனினும், தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பின்னரும், ஆர்.பி.சௌத்ரி தான் அளித்த உறுதிமொழி பத்திரங்களை திருப்பி அளிக்கவில்லை என்று விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.   

மேலும் கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் தனது ஆவணங்களை திருப்பி கொடுக்காமல் ஆர்.பி.சௌத்ரி இழுத்தடித்ததாகவும் விஷால் புகார் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News