மார்க் ஆண்டனியை விட மெர்சலா இருக்கே!.. விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் டீசர் வெளியானது!..
விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படம் அடுத்த மாதம் ஜூலையில் வெளியாகும் என்கிற அட்டகாச அப்டேட் உடன் படத்தின் டீசரையும் விஷால் வெளியிட்டுள்ளார். மகுடம் படத்தை ரிலீஸ் செய்த பின்னர் தான் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்வாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் சங்க கட்டடமும் இன்னமும் ரெடியாகவில்லை.
ரவி அரசு இயக்கத்தில் உருவான மகுடம் படத்தில் திடீரென ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தில் இருந்து ரவி அரசு நீக்கப்பட்டு அந்த படத்தை விஷால் இயக்க முடிவு செய்தார்.
ஏற்கனவே மிஷ்கினின் துப்பறிவாளன் 2வுக்கு நடந்த அதே கதிதானா என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகப் போவதை டீசர் வெளியிட்டு உறுதி செய்துள்ளார் விஷால்.
மதகஜ ராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அஞ்சலி உடன் இணைந்து மகுடம் படத்தில் விஷால் நடித்துள்ளார். அந்த படத்தில் அஞ்சலி ஜோடியாக நடித்த நிலையில், இந்த படத்தில் விஷாலுக்கு பிளாஷ்பேக்கில் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
After nurturing this dream for 30 years, today my official directorial debut finally steps into the spotlight!
— Vishal (@VishalKOfficial) June 11, 2026
Countless battles. One vision. Today, the crown rises 👑
Proud and super excited to unveil the TEASER of #Magudam / #Makutam.
A Film built with conviction.
A…
துஷாரா விஜயன் ஹீரோ விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பதும் தெளிவாக தெரிகிறது. ஆரம்பத்திலேயே எரியும் உடலில் இருந்து நெருப்பு பற்ற வைத்து புகைப்பிடிப்பது, லோகேஷ் கனகராஜ் படத்தை போல ரத்தம் சொட்ட சொட்ட காட்சிகள் என டீசர் மொத்தமும் மிரட்டுகிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் விஷாலுக்கு மார்க் ஆண்டனி போல வெற்றியை கொடுக்குமா என்பதை காண கோடம்பாக்கம் காத்திருக்கிறது.
