×

இயக்குனரை டீலில் விட்ட விஜய்... கை கொடுப்பாரா விஷால்?...பரபர அப்டேட்
 

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருந்த புதிய திரைப்படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிய பின், அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் எழுந்துள்ளது. 

ஏற்கனவே தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும், விஜயை வைத்து சிவகாசி,  திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு பெயரும் அடிபட்டது.

இந்நிலையில், கோலமாவு கோகிலா  பட இயக்குனர் நெல்சன் கூறிய கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் அவரை விஜய் தேர்ந்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் 4 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இப்படத்தை முடித்த பின் அவர் விஜய் படம் தொடர்பான வேலையை துவங்குவார் எனத்தெரிகிறது.

நெல்சனுக்கு முன் அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு கூறியை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாம். எனவே, விஜய் தன்னை அழைப்பார் என அவர் காத்திருந்தாராம். ஆனால், தற்போது விஜய் நெல்சனை ஓகே செய்துவிட்டதால், இந்த கதையில் விஷாலை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News