கருணாஸெல்லாம் போய் சிஎம் விஜய்யை பார்த்துட்டாரு!.. ஐயோ நான் மிஸ் பண்ணிட்டேனே விஷால் புலம்பல்!

கருணாஸெல்லாம் போய் சிஎம் விஜய்யை பார்த்துட்டாரு!.. ஐயோ நான் மிஸ் பண்ணிட்டேனே விஷால் புலம்பல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு நாசர், பொருளாளர் திரு கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு பூச்சி எஸ். முருகன் மற்றும் திரு கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுள்ளனர்.

கருணாஸெல்லாம் போய் சிஎம் விஜய்யை பார்த்துட்டாரு!.. ஐயோ நான் மிஸ் பண்ணிட்டேனே விஷால் புலம்பல்!

நடிகராக இருந்த ஜோசப் விஜய், அரசியலுக்கு வந்து மக்கள் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக உயர்ந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கருணாஸெல்லாம் போய் சிஎம் விஜய்யை பார்த்துட்டாரு!.. ஐயோ நான் மிஸ் பண்ணிட்டேனே விஷால் புலம்பல்!

மேலும், நடிகர் சங்க செயலாலரான விஷால் அதில் கலந்துக்கொள்ளாததற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று கொல்கத்தாவில் படப்பிடிப்பில் இருந்ததால், எனது நடிகர் சங்கப் பொறுப்பாளர்களுடன் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்தும் வாய்ப்பைத் தவறவிட்டேன். நம்மைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பதைக் காண்பது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

From Around the web