Categories: Cinema News latest news

பிளாப் கொடுத்தும் சம்பளத்தை குறைக்கலயே!… அட மாறுங்க விஷால்!…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷால். இவரும் பாதி சிம்புதான். படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்ல மட்டார். எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்.

படப்பிடிப்பு குழுவினர் கால் கடுக்க காத்திருக்கும் போது இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிருப்பார் என திரையுலகினரே கூறுகிறார்கள். முன்பெல்லாம் பொது விஷயங்களில் கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டுவார். தற்போது அதையெல்லாம் விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரும் ஆர்யாவும் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் எனிமி. இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. எனவே, இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமாருக்கு ரூ.3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதே தயாரிப்பாளர் தயாரிப்பில் விஷால் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நஷ்டத்தை காட்டி சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க விஷால் மறுக்கிறாராம். நான் கூறும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்கிறாராம்.

ஹிட் கொடுத்தால் சம்பளத்தை ஏற்றும் நடிகர்கள் பிளாப் கொடுத்தால் சம்பளத்தை குறைப்பதுதானே நியாயம்..

புரிந்து கொள்வாரா விஷால்?..

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா