நான் சும்மா விடமாட்டேன்.. விஷாலுக்காக களமிறங்கிய பிரபலம்.. இதுதான் பிரச்சினையா?
சமீபத்தில் மதகஜராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து இந்தப் படம் ரிலீஸாக இருக்கின்றன. இந்த படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியிருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து சுந்தரியிடமிருந்து ஒரு பக்கா நகைச்சுவை பேக்காஜாக இந்தப் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே விஷாலை பற்றி எந்ததகவலும் தெரியாத நேரத்தில் திடீரென மதகஜராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார் விஷால். அப்போது கை நடுக்கத்துடன் மைக்கை பிடித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. உடனே தொகுப்பாளினி டிடி விஷாலுக்கு வைரல் காய்ச்சல் என நிலைமையை சமாளித்தார்.
ஆனால் உண்மையிலேயே விஷாலுக்கு என்ன நடந்தது என்பதை விஷாலின் உயிர் நண்பரும் தயாரிப்பாளரும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஷாலின் இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் பாலாதான். அவன் இவன் படத்தில் அவருடைய கேரக்டர் ஏற்படுத்திய தாக்கம் தான் விஷாலை இந்தளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதிலிருந்தே விஷால் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் எங்களுக்கு உள்ள பெரிய கோபம் என்ன என்றால் இதனால் வரும் பக்கவிளைவுகள் என்ன என்பது பாலாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அப்படி தெரிந்தும் ஒரு நடிகரை இப்படி உடல் ரீதியாக வருத்தி நடிக்க வைக்கலாமா? அப்படியே நடிக்க சொன்னாலும் விஷாலும் நடிக்க சம்மதிக்கலாமா? இன்னும் வருங்காலங்களில் விஷாலின் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்தால் எங்களுக்கு கவலையாக இருக்கிறது. அடுத்த விஜயகாந்தா மாறிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. விஷாலின் இந்த நிலைமைக்கு காரணமான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.
அதை தக்க நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைத்து நியாயம் பெற்றுத்தருவேன். அதுவும் இல்லாமல் போதைப் பழக்கத்தில் விஷால் ஈடுபட்டிருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள். ஆங்காங்கே போதை பொருளை ஒழிப்பேன் என்று கோஷமிடும் விஷால் எப்படி அந்தப் பழக்கத்திற்கு ஆளாவார்? அதனால் இவருடைய இந்த நிலைமைக்கு பாலா ஒருவரே காரணம் என அவருடைய நண்பர் ராஜா கூறினார்.