என்னது மார்க் ஆண்டனி 2 வா? இதுக்கு அவர் ஒத்துக்கனுமே.. விஷால் போட்ட கணக்கு
பாலா 25:
சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளியாக இருக்கும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதோடு பாலா இந்த சினிமா துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல இயக்குனர்கள் அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து பாலாவை வாழ்த்தினார்கள்.
மேலும் பாலாவை பற்றி பல்வேறு அனுபவங்களை அவருடன் பணியாற்றிய பல பிரபலங்கள் பகிர்ந்து கொண்டனர். இன்று தமிழ் சினிமாவில் மிகவும் உச்சத்தில் இருக்கும் நடிகரான சூர்யாவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர் பாலா என்பது அனைவருக்குமே தெரியும். நந்தா படம் வெளிவரவில்லை என்றால் இன்று சூர்யா என்றால் யார் என நாம் அனைவரும் கேட்டிருப்போம்.
நந்தா படம்:
நந்தா படத்தை இயக்கியதன் மூலம் சூர்யாவுக்கு இந்த சினிமா துறையில் ஒரு தனி மரியாதையை பெற்று கொடுத்தவர் பாலா. அதைப்போல விஷாலுக்கும் அவன் இவன் என்ற திரைப்படத்தை கொடுத்ததன் மூலம் ஒரு அங்கீகாரத்தை கொடுத்ததும் பாலா தான். ஆனால் இந்த விழாவிற்கு விஷால் வரவில்லை. அவரை தொடர்பு கொண்ட போது நாட் ரீச்சபிளாக இருந்தார் விஷால்.
இந்த நிலையில் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு புலன் விசாரணையை மையப்படுத்தி வெளியான இதன் முதல் பாகத்தை மிஷ்கின் இயக்க விஷால் அந்த படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்க மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட இந்த படத்தை விஷாலே தொடர்வதாக இருந்தது.
துப்பறிவாளன்2:
ஆனால் அறிவுப்பு வெளியானதில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் துப்பறிவாளன் 2 பற்றி எதுவுமே வெளியாகவில்லை. இப்போது வந்த தகவலின் படி துப்பறிவாளன் 2 படத்திற்கு பைனான்ஸ் தர யாருமே முன்வராததால் பல இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் விஷால். அதில் ஹரியிடம் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தை பண்ணலாமா என்றும் கேட்டிருக்கிறார்.
அதோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தையும் எடுக்கலாமா என பேசி வருகிறாராம் விஷால். மீண்டும் விஷால், எஸ் ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் காம்போவில் ஒரு படம் என்றால் யாரும் யோசிக்காமல் பைனான்ஸ் பண்ண வருவார்கள் என்பதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் விஷால்.
ஆனால் ஒரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு வேளை அந்தப் படம் பெரிய அளவில் ஹிட்டானால் மீண்டும் விஷாலை வைத்து படம் எடுக்க ஆதிக் முன் வருவாரா என்பதுதான் கோடம்பாக்கத்தில் உள்ளவர்களின் கேள்வியாக இருக்கிறது.
Also Read: விஜய்னா யாருன்னு கேட்ட சூப்பர்ஸ்டார்.... தயாரிப்பாளர் சொன்ன அந்தத் தகவல்