Magudam Box Office : 2 கோடிக்கே மூச்சு வாங்கும் மகுடம்!

 
Magudam

3 நாட்களில் 'மகுடம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'ஈட்டி' என்ற ஹிட் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு.

இதையடுத்து 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கினார். இவர் கதை, திரைக்கதை எழுதி தான் விஷாலின் 'மகுடம்' படத்தை முதலில் இயக்க ஒப்பந்தமாகி, சில நாட்கள் ஷூட்டிங்கும் சென்றது.

பின், சில பிரச்சனையால் ரவி அரசு விலக, விஷாலே திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து படத்தை இயக்கவும் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளிவந்த இந்த படத்திற்கு வருவது எல்லாமே நெகட்டிவ் விமர்சனங்கள் தான். வசூலும் மிக குறைவு தான். கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.2.10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

From Around the web