Magudam Box Office : 4வது நாளில் வெறும் 12 லட்சம் வசூலித்த மகுடம்!
Updated: Aug 18, 2026, 03:56 IST
4 நாட்களில் 'மகுடம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'இரும்புத் திரை' படத்துக்கு பிறகு தொடர்ச்சியாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த விஷாலுக்கு கம்பேக் கொடுத்த படம் 'மார்க் ஆண்டனி' தான்.
அதன் பிறகு 'ரத்னம்' வெற்றிபெறவில்லை. 'மதகஜராஜா' பல ஆண்டுகள் காத்திருந்து லேட் ரிலீஸ் ஆகி விஷாலே எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், விஷால் இயக்குநர் சீட்டில் அமர்ந்து டைரக்ட் பண்ணதுடன், இரண்டு வேடங்களில் நடிக்கவும் செய்துள்ள படம் தான் 'மகுடம்'. இப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தான் வெளியிடப்பட்டது.
படத்தை பார்த்த ஒவ்வொருவரும் போதும்டா சாமி என கதறி வரும் நிலையில் தான் ரிசல்ட் வந்த வண்ணமிருக்கிறது. தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.2.22 கோடி தான் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.