Magudam Box Office : 5 நாளாச்சு, 3 கோடிய கூட நெருங்காத மகுடம்!
Aug 19, 2026, 06:20 IST
5 நாட்களில் 'மகுடம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக கொடி கட்டி பறந்தவர் ஆர்.பி.சௌத்ரி. சமீபத்தில் தான் இவர் காலமானார்.
இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மூலமாக உருவாகியுள்ள 99-வது படம் தான் 'மகுடம்'. நம்ம 'புரட்சி தளபதி' விஷால் தான் ஹீரோ.
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆன இந்த படத்தை இயக்கியதும் 'புரட்சி தளபதி' தான். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால், ஆடியன்ஸுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.2.34 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம்.