Magudam Box Office : முட்டி மோதி 2.50 கோடியை தாண்டிய மகுடம்!

 
Magudam

ஒரு வாரத்தில் 'மகுடம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. விஷால் நடிப்பில் 'மகுடம், புருஷன், துப்பறிவாளன் 2' என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் 'மகுடம்' படம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று தான் திரைக்கு வந்தது. இந்த படத்தை விஷால் தான் இயக்கவும் செய்திருந்தார்.

இதில் முக்கிய கேரக்டர்களில் அஞ்சலி, ஜான் விஜய், துஷாரா விஜயன், ஜெயப்பிரகாஷ், ஜாவா சுந்தரேசன், அஜய், தம்பி இராமையா, அர்ஜை, அபு சலீம், வம்சி கிருஷ்ணா, சரவண சுப்பையா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டுமே போர் அடிப்பதாக தான் பார்த்தவர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள். தற்போது, கடந்த 7 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.2.66 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From Around the web