அதிக லைக்ஸ் குவிக்கும் 'மகுடம்' படத்தில் விஷால், அஞ்சலி டூயட் பாடும் 'நச்சிந்தி மச்சானே' பாடல்!
'புரட்சி தளபதி' விஷாலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காகவே இரண்டு மொழிகளிலும் தனது அடுத்த படமான 'மகுடம்'-ஐ ரெடி செய்து கொண்டிருக்கிறார் விஷால்.
ரவி அரசுவின் கதைக்கு, விஷாலே திரைக்கதை எழுதி, இயக்கி வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து துஷாரா விஜயன், ஜான் விஜய், அர்ஜை, வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்தது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
படத்தை வருகிற ஜூலையில் வெளியிட வேண்டும் என்று ப்ளான் போட்டிருக்கிறார் விஷால். இந்நிலையில், இன்று ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விஷால், அஞ்சலி டூயட் பாடி ஆடும் 'நச்சிந்தி மச்சானே' பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
Met my lovely fans/ friends. After a gap.
— Vishal (@VishalKOfficial) June 28, 2026
This love has no boundaries likewise. Always indebted to u all. Now heading to the launch event of the second single of #Magudam / #Magudam. This is what I always loved to watch in my favourite hero’s films always. The massy folk…
