ஆகஸ்ட் 14-ல் விஷாலின் மகுடம் ரிலீஸாவதில் இப்படி ஒரு சிக்கலா?
Jul 30, 2026, 16:01 IST
விஷால் நடித்து, இயக்கியுள்ள புதிய படம் தான் 'மகுடம்'. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
இதே தேதியில் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' மற்றும் கவின் - நயன்தாராவின் 'ஹாய்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவிருக்கிறது.
தற்போது, 'மகுடம்' சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஷால் ரூ.50 கோடி செட்டில் செய்ய வேண்டியுள்ளதாம்.
இன்னும் படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT ரைட்ஸையும் யாரும் வாங்கவில்லையாம். இதனால் பணத்தை ரெடி பண்ணுவதற்கு தாமதம் ஆகும் என்பதால், படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கலாம் என விஷால் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
