RISE OF LINGA... வெளியானது விஷாலின் 'மகுடம்' படத்தின் முதல் சிங்கிள்!

 
magudam

விஷாலுக்கு கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்களை டார்கெட் செய்யும் விதமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரெடியாகி கொண்டிருக்கிறது 'மகுடம்'.

இப்படம் விஷாலுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். காரணம் இதில் ஹீரோ மட்டும் இல்லை, அவரே தான் இயக்குநர் சீட்டிலும் அமர்ந்து படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் வெளியான இதன் டீசர் விஷால் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தது. தற்போது, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் 'RISE OF LINGA'-வை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர ப்ளான் போட்டுள்ளனர்.

From Around the web