முடிவடைந்தது 'மகுடம்' ஷூட்டிங்... வீடியோ மூலம் அறிவித்த விஷால்!

 
vishal magudam

விஷால் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரெடியாகி கொண்டிருக்கும் படம் தான் 'மகுடம்'. இப்படத்தை முதலில் 'ஈட்டி' இயக்குநர் ரவி அரசு இயக்கி வந்தார்.

பின், இவருக்கும், விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இவர் விலகி விட்டார். அதன் பிறகு விஷாலே இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

இதில் விஷாலுடன் இணைந்து ஜான் விஜய், அஞ்சலி, துஷாரா விஜயன், வம்சி கிருஷ்ணா நடிக்கிறார்கள். சமீபத்தில், இதன் டீசர் மற்றும் 'RISE OF LINGA' பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

தற்போது, விஷால் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார். படத்தை வருகிற ஜூலையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம்.

From Around the web