மகுடம் ட்ரெய்லர் ரிலீஸுக்கு நாள் குறித்த விஷால்!
இதுவரை நடிகர் விஷாலை தான் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். 'சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, பாண்டியநாடு, துப்பறிவாளன், இரும்புத்திரை' என பல படங்களில் மாஸ் காட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
ஆனால், நாம் பார்க்காத வேறு ஒரு திறமை விஷாலிடம் உள்ளது. நடிகர் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 'வேதம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் விஷால்.
தற்போது, பல படங்களில் நடித்து மற்ற இயக்குநர்களிடமும் நிறைய கற்றுக் கொண்ட நடிகர் விஷால் மகுடம் படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார்.
The Crown is Ready !!#Magudam /#Makutam Trailer from August 7th & releasing Worldwide on August 14th#DirectorVishal #SGF99 #MagudamTrailerFromAug7th #MagudamReleaseOnAug14th pic.twitter.com/YLJ0x9EjY9
— Vishal (@VishalKOfficial) August 5, 2026
இதில் அஞ்சலி, துஷாரா விஜயன் என ரெண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.
