3 ரோல்களில் விஷால் நடித்துள்ள மகுடம் ட்ரெய்லர்!
விஷால் மூன்று வித்தியாசமான ரோல்களில் நடித்திருக்கும் புதிய படம் தான் 'மகுடம்'. இதற்கு கதை எழுதியிருப்பது 'ஈட்டி, ஐங்கரன்' இயக்குநர் ரவி அரசு தான்.
திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விஷால். இது தான் இயக்குநராக விஷாலுக்கு முதல் படம். ஏற்கனவே, 'துப்பறிவாளன் 2'-வை இயக்குவதாக இருந்தது. ஆனால், அது ஆரம்பிக்கவே இல்லை.
'மகுடம்' படத்தில் 2 ஹீரோயின்ஸ் நடித்துள்ளார்கள். ஒருவர் அஞ்சலி, இன்னொருவர் துஷாரா விஜயன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அபினந்தன் ராமானுஜம், ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
It's time to witness the rise.
— Vishal (@VishalKOfficial) August 7, 2026
The #MagudamTrailer is finally HERE!https://t.co/IUXiBa6NIV
Worldwide theatrical release on August 14.#DirectorVishal #SGF99 #MagudamReleaseOnAug14th
தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.