×

படப்பிடிப்பில் பாய்ந்து விழுந்த நடிகர் விஷால்... அதிர்ச்சி வீடியோ...

 
vishal

நடிகர் விஷால் தற்போது அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஷாலின் 31வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. எனவே, விஷால் 31 என படக்குழு அழைத்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிரது.இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பில் ஹயாத்தி நடிக்கிறார்.மேலும், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

vishal

இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடித்து வருகிறார். எனவே, விஷாலை பாபு ராஜை தூக்கி வீசுவது போலவும், எட்டி உதைப்பது போலவரும் விஷால் பின்னால் உள்ள இரும்பு பலகையில் மோதுவது போலவும் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, விஷாலின் முதுகில் பலத்த அடிபட்டது. 

vishal

இதனையடுத்து, அவருக்கு படப்பிடிப்பு தளத்திலேயே பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனாலும், அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை செய்துள்ளனர்.

இந்நிலையில், விஷால் காயமடைந்த அந்த வீடியோவை விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News