Categories: Cinema News latest news

விஷால் பட ஃபர்ஸ்ட் லுக்கில் ஜி.வி.பிரகாஷ்.. இதை கூட மாத்தலயா?

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தாலும் ரசிக்கும் படி இருந்ததால் இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இப்படத்திற்கு பின் சிம்புவை வைத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இப்படத்தில் சிம்பு கொடுத்த குடைச்சலில் அரைகுறையாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டதில் படம் பப்படம் ஆனது. அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் 10 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அந்த பஞ்சாயத்து இப்போது வரை சிம்புவை துரத்தி வருகிறது.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் படத்தின் அறிவிப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது. ஆனால், அந்த போஸ்டரை உற்று பார்த்தால் அதில் இருப்பது ஜி.வி.பிரகாஷ் என்பது நன்றாக தெரியும். இதற்கு பின்னால் ஒரு கதையும் இருக்கிறது.

இப்படத்தின் கதை ஜி.வி.பிரகாஷுக்கு சொல்லப்பட்டு தயராக இருந்தது. ஜி.வி.பிரகாஷை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. தற்போது அதே கதையை விஷாலிடம் கூறி படத்தை இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

எல்லாம் சரிதான். அதற்காக போஸ்டரில் ஹீரோவின் தோற்றத்தை மாற்ற வேண்டியது இயக்குனரிடன் வேலை இல்லையா?..

இதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து விட்டார்கள் போல!…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா