Categories: Cinema News Gossips latest news

இறந்துபோன தயாரிப்பாளருக்கு விஷால் செய்தது அநியாயம்.! வேதனையின் உச்சத்தில் குடும்பத்தார்.!

ஒரு பெரிய காம்பேக் ஹிட்டுக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார் நம்ம புரட்சி தளபதி விஷால். கடைசியாக வெளியான எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.

இதனால் ,அடுத்தடுத்து பெரிதாக  விஷால் நம்பி இருக்கும்  திரைப்படங்கள் என்றால் அது லத்தி மற்றும் மார்க் ஆன்டனி திரைப்படங்கள் தான். இதில் லத்தி பட ஷூட்டிங் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விஷால் பற்றி ஒரு திடுக்கிடும் தகவலை வலைப்பேச்சு சினிமா செய்தியாளர்கள் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளனர். அதாவது, பிரபு நடித்திருந்த சின்ன தம்பி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பாலு என்பவரின் தயாரிப்பில் நடிக்க விஷால் 7 கோடி ரூபாய் அளவுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தாராம்

இதையும் படியுங்களேன் – அவ்ளோ நல்லவங்களா நீங்க.?! பீஸ்ட் நஷ்டத்தை கோடிகளில் செட்டில் செய்த சன் பிக்ச்சர்ஸ்.!

ஆனால், துரதிஷ்டவசமாக அந்த தயாரிப்பாளர் அண்மையில் கொரோனா காரணமாக இறந்துவிட்டாராம். அவர் இறந்து மாதங்கள் ஆகிறது. இன்னும் விஷால் அந்த படம் பற்றி எதுவும் கூற மறுக்கிறாராம். அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி இன்னும் அந்த குடும்பத்திற்கு விஷால் தரவில்லையாம்.

இதனால் அந்த குடும்பம் போலீசில் புகார் அளிக்கும் நிலையில் இருக்கிறதாம். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுளளதாம். விஷயம் பெரிதாவதற்குள் விஷால் உடனடியாக அந்த பணத்தை திருப்பி கொடுத்தால் அவரது பெயர் கெடாமல் இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

Manikandan
Published by
Manikandan