தமிழ் சினிமாவில் விறுவிறுப்புக்கு பேர் போன நடிகர் யாரென்றால் விஷால். இவர் படங்களில் சண்டைக்காட்சிகளில் அதிகம் மெனக்கிட்டு தன் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடியவர். மேலும் வசனங்களை வெளியிடும் இவரது மனப்பான்மை அனைவரையும் நாற்காலியின் நுனியில் அமர வைக்க கூடிய நிலைமைக்கு தள்ளிக் கொண்டு போய்விடும்.
அந்த அளவிற்கு சுறு சுறுப்பாக நடிக்கும் நடிகராவார். சமீபத்தில் லத்தி படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் ஈடுபடும் போது மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மார்க் ஆண்டனி, சொந்த இயக்கத்தில் துப்பறிவாளன் – 2 படம் இவற்றில் பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் திரைக்கு வரவிருக்க காத்துக் கொண்டிருக்கும் படம் தி வாரியர் படத்தின் புரோமோஷன் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால் நதியாவின் அழகின் ரகசியத்தை பகிரும் படி கேட்டார்.
மேலும் பார்த்திபன் தான் உண்மையான வாரியர் என புகழாரம் சூடினார். அவர் அருகில் உட்கார்ந்திருந்த எஸ்ஜே.சூர்யாவை பற்றியும் பெருமையாக பேசிய விஷால் நான் லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு சீனியர் தான் எஸ்.ஜே. சூர்யா. அப்பவே அவர் கதைகளை எழுதிக் கொண்டே இருப்பார். மேலும் எனக்கு எப்படி ஒவ்வொரு நிமிஷம் ஒரு கேர்ள் ஃபிரண்டோடு இருப்பது சந்தோஷமோ அதே போல் தான் அவர் கூட இருப்பதும் எனக்கு சந்தோஷம் என எஸ்.ஜே. சூர்யாவை பற்றி விஷால் கூறினார்.
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…