Connect with us

Cinema News

உங்கம்மா எங்கம்மா இல்லடா!.. இது சினிமா.. எனக்கு யாருமே எண்ட் கார்டு போட முடியாது.. திமிறிய விஷால்!..

மார்க் ஆண்டனியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் விஷால் படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து வந்தார். அப்போது, அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் விதிக்க தீர்மானித்துள்ள ரெட் கார்டு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்து பேசும் விதமாக பேசிய விஷால், “உங்கம்மா.. எங்கம்மா.. இல்லடா.. இது சினிமா.. இப்படி தெலுங்கு டப்பிங் படங்களில் பேசுவாங்க, அதையேத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

இதையும் படிங்க: இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னால!. பாவாடை தாவணியில் சூடேத்தும் ஷிவானி (வீடியோ)

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலரும் தடுத்தனர். ஆனால், தயாரிப்பாளர் வினோத்துக்கு இருந்த துணிச்சல் மற்றும் எங்கள் டீமுக்கு இருந்த நம்பிக்கை தான் இந்த படம் வெளியாக காரணமாக இருந்தது.

தொடர்ந்து என்னுடைய ரசிகர்களுக்காக அவர்களை மகிழ்விக்கக் கூடிய படங்களில் நடிப்பேன். இரும்புத்திரை படத்தில் எப்படி அர்ஜுன் சாரோட ரோல் வெயிட்டா இருந்ததோ அதை போலத்தான் இந்த படத்தில் என்னோட அண்ணன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா நடிப்பு அற்புதமாக இருந்தது.

இதையும் படிங்க: லோகேஷுக்கு ஒன்னுமே தெரியாது!.. இத பண்ணிதான் ஹிட் கொடுக்குறாரு!.. கடுப்பில் பேசிய நடிகர்!..

இதற்காக ஈகோ எல்லாம் பட மாட்டேன். அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒரு வசனத்தை இப்படித்தான் பேச வேண்டும் என நினைச்சிட்டு இருப்போம்ல, அதையெல்லாம் பிரேக் பண்ணி எப்படி வேணும்னாலும் மாடுலேஷனை மாத்தி பேசலாம்னு கத்துக் கொடுத்தவரே எஸ்.ஜே. சூர்யா தான் என பேசியிருந்தார்.

மேலும், தனக்கு தடை போட இங்க யாருமே இல்லை என்றும் சினிமா ரொம்ப பெரியது. அதை ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியாது எனக் கூறியிருந்தார் விஷால்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top