அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு.. விஷால் தரப்பில் அதிரடி நடவடிக்கை

விஷால் மீது அவதூறு பேசிய youtube சேனல்கள் மற்றும் youtubers என அவர்களின் மீது மூன்று பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு கொடுத்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது .சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி ,வரலட்சுமி சரத்குமார், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மதகஜராஜா.
அந்த படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இப்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது .படத்திற்கு பலமாக இருந்ததே படத்தில் அமைந்த காமெடி தான். சுந்தர் சி படங்கள் பெரும்பாலும் காமெடிக்கு புகழ் பெற்றவை. அந்த வகையில் இந்த படமும் ஹிட் அடித்து இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது விஷால் கை நடுங்கியபடி பதற்றத்துடன் வருவதை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மைக் கூட பிடித்து பேச முடியாத அளவுக்கு அவருடைய கை நடுக்கத்துடன் காணப்பட்டது. உடனே இதை யூடியூப் சேனல்கள் பெரும் வைரல் ஆக்கினர். இவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார். பெண்களுடன் பழக்கம் என கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் படம் வெளியாகி இரண்டாவது நாளிலேயே விஷால் முற்றிலுமாக வேறு மாதிரியாக காணப்பட்டார். மிகவும் தெம்போடு ஸ்டைலாக கூலாக படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தார் விஷால். சமீபத்தில் நடந்த வெற்றி விழாவிலும் விஷால் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால் இசை வெளியீட்டு விழாவில் அவருடைய நடவடிக்கையை பார்த்து அனைவருமே கடுமையாக விமர்சித்து வந்தனர் .
இதையும் விஷால் நிலநடுக்கம் வந்தால் கூட ஒரே நாளில் அந்த நியூஸ் மறைந்துவிடும். ஆனால் விஷாலுக்கு நடுக்கம் என்பது இப்பொழுது வரைக்கும் செய்திகளில் வைரலாகி வருகின்றது என கிண்டலாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் விஷாலை பற்றிய அவதூறு பரப்பிய யூடியூபர்ஸ் மற்றும் youtube சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பத்திரிகையாளர் சேகுவாரா மீது வழக்குப்பதிவு தொடர்ந்திருப்பதாக தெரிகிறது .அவரும் வேறொரு வழக்குக்காக போலீசில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.