தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும்- தனுஷ் குறித்து விஷால் கருத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை மூலம் அறிமுகம் ஆன அவர் கிட்டத்தட்ட 50 படங்களை கடந்துவிட்டார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் இவர். விஜய் அரசியலில் வெற்றி பெற்றதை அடுத்து பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது. அதில் தனுஷ் முக்கியமானவர். சமீபகாலமாக தனுஷ் செயல்பாடுகள் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதாகவே தெரிகிறது. அதனை உறுதிப்ப்பப்டுத்தும் விதமாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக தலைவர்களை நியமிப்பதில் ஈடுபட்டு வருகிறார். இது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஷால் தனுஷ் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக நிறைய பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருந்தால் முதலில் அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் சேவை என்ப்பது சாதாரண விசயம் இல்லை. பச்சை மையில் கையெழுத்து ப்போட்டால மக்களுக்கு அதிகமாக நல்லது செய்ய முடியும். தனுஷ் ஒரு சிறந்த நடிகர். சிறந்த இயக்குனர். இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு சென்றால் தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும் என்று கூறினார்.