×

அண்ணாத்த செட்டில் ஷூட்டிங் தொடங்கிய விஷால் டீம்!

நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதரபாத்தில் தொடங்கியுள்ளது.

 

நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதரபாத்தில் தொடங்கியுள்ளது.

விஷால் நடிப்பில் மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார்ப் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அது தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படத்தின் பிற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. படத்தின் கதாநாயகியாக டப்ஸ்மாஷ் பிரபலம் மிருனாளினி ரவியும் ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகரும் ஒப்பந்தமானார்கள். படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமானர். அவன் இவன் படத்துக்குப் பின் அவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. விறுவிறுவென படப்பிடிப்பை முடித்து விரைவில் படத்தை ரிலிஸ் செய்யும் முனைப்பில் உள்ளதாம் படக்குழு. தற்போது ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அண்ணாத்த படத்துக்காக போடப்பட்ட செட்களில் இந்த படப்பிடிப்பு நடப்பதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News