×

துப்பறிவாளன் 2 வை தூசுதட்டும் விஷால் – அடுத்த மாதம் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் விஷால் நடிப்பில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

 

நடிகர் விஷால் நடிப்பில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கியதுப்பறிவாளன் படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் அவர்கள் கூட்டணியிலேயே உருவானது. இதற்காக லண்டன் சென்ற படக்குழு முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தது. லண்டனில் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து இரு தரப்பும் மாறி மாறி அறிக்கை விட்டு மற்றவர்களைத் தாக்கினர். இதையடுத்து மீதிப் படத்தை தானே இயக்கப் போவதாக விஷால் அறிவித்தார்.

ஆனால் பல மாதங்களாக அந்த படம் கிடப்பில் இருக்க, அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தினார் விஷால். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர்  9 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாம். இதற்காக விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் லண்டன் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News