×

நாகரீகம் தெரிந்தால் விஷால் வரமாட்டார் - செக் வைத்த பாரதிராஜா
 

தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல் குறித்து பாராதிராஜா பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
 

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடந்து அதில் முறைகேடு இருப்பதாக கூறி, அந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 30ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார் உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின் கூட்டாக செய்தியார்களை சந்தித்து பேசினர். அப்போது இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பதே தேவை இல்லை. ஒற்றுமை இல்லாததால் பல அணிகள் உருவாகி விட்டது. அவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். ஆனால் போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என ஆசைப்படுகிறோம்.

தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் தலைமை இடத்திற்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. 

எனவே அவர் நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News