×

விஷாலின் அதிரடி புகார்... விளக்கம் அளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி

என்ன நடந்தது என்று தம் தரப்பினை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கினார்.
 
rb-choudary-over-vishals-police-complaint-against-him-photos-pictures-stills

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பல மாதங்களாக, தமது ஆவணங்களை தவறான முறையில் தம்மிடமே வைத்திருப்பதாகவும், இதைக் கேட்கும் தம்மை தவிர்த்து வருவதாகவும் கூறி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார்.

நடிகர்-தயாரிப்பாளர் விஷால் சென்னை போலீசில் ஆர்.பி.சௌத்ரிக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விஷாலின் புகாருக்கு  தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி பதில் அளித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து கடந்த புதன்கிழமை விஷால் தமது ட்வீட்டில்,, “திரு ஆர்.பி.சௌத்ரி இரும்புத்திரை திரைப்படத்திற்காக கடனை திருப்பிச் செலுத்திய சில மாதங்களுக்குப் பிறகும் செக் லீஃப், பத்திரங்கள் மற்றும் உறுதிமொழிக் குறிப்புகளைத் திருப்பித் தரத் தவறிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் போலீசில் புகார் அளித்துள்ளோம். ” என குறிப்பிட்டிருந்தார்.

என்ன நடந்தது என்று தம் தரப்பினை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கினார். அதன்படி, அந்த ஆவணங்களை சிவகுமார் என்பவரிடம் கொடுத்ததாகவும், அதை திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கொடுக்கும்படி தான் அறிவுறுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்து, அது விஷாலுக்கு அனுப்பப்படும் என்றும் இருப்பினும், சிவகுமார் திடீரென மறைந்ததன் பிறகு, அந்த ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்கள் இன்னும் அந்த ஆவணங்களைத் தேடி வருவதாகவும், கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக விஷயங்கள் மேலும் கடினமாகிவிட்டதாகவும் ஆர்.பி.சௌத்ரி கூறினார். தற்போது கொடைக்கானலில் இருக்கும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ஓரிரு நாட்களில் சென்னை திரும்பி இந்த பிரச்சினையில் சரியான விளக்கம் தருவதாகவும், விரைவில் இந்த விஷயத்தை தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News