×

வாழ்வா சாவா பிரச்சனை... சக்ராவால் கலங்கும் விஷால் 

விஷால் நடித்திருக்கும் சக்ரா படம் பிப்ரவரி 19-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

தென்னிந்திய நடிகர் சங்க பிரச்சனை, முந்தைய படங்களில் ஏற்பட்ட நஷ்டம் உள்ளிட்டவைகளால் விஷால் பெரிய நெருக்கடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில் விவரமறிந்தவர்கள். இந்த நெருக்கடியில் இருந்து மீள விஷால் பகீரத முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. 


இந்தநிலையில், அவரது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் பேனரில் அவர் நடித்திருக்கும் சக்ரா படம் ரிலீஸுக்குத் தயாராகி ஒரு வருடமாகப்போகிறது. புதுமுக இயக்குனர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இயக்கியிருந்த சக்ரா படம் போன வருடம் மே மாதத்திலேயே ரிலீஸுக்குத் தேதி குறிக்கப்பட்டது. ஆனால், கொரோனா சூழலால் தள்ளிப்போனது. அதேபோல், ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு, அந்த விவகாரம் கோர்ட் வரை போனது. 


பின்னர் அந்த ஐடியாவிலிருந்து விஷால் பின்வாங்க, இறுதியாகத் தற்போது பிப்ரவரி 19ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், கடன் நெருக்கடியால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் கோலிவுட்டில். ஆனால், விஷால் தரப்பிலோ ஆந்திரா, தெலங்கானாவில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், ஹிந்தியில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்றும் தமிழ்நாட்டிலும் நிச்சயம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் சொல்கிறார்கள். இது விஷாலுக்கு வாழ்வா சாவா பிரச்சனை என்கிறார்கள். என்ன நடக்கிறது என்பது விஷாலுக்கும் அந்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்.  


 

From around the web

Trending Videos

Tamilnadu News