×

விஷாலின் சக்ரா பட புதிய ட்ரைலர் 4 மொழிகளில் ரிலீஸ்!

விஷாலின் விஷால் ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.

 

அதாவது  ”சக்ரா படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  ஹேக்கிங்கை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் புதிய ட்ரைலர் வரும் சனிக்கிழமை 27-ம் தேதி வெளியாகவுள்ளதாம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த ட்ரைலருக்காக விஷால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News