வீழ்வேன் என்று நினைத்தாயோ.. வெற்றிவிழாவில் தன்னுடைய லைன் அப்களை கூறி ஷாக் கொடுத்த விஷால்
பொங்கல் வெற்றி: பொங்கல் ரிலீஸாக பல படங்கள் வெளியான நிலையில் மிகப்பெரிய பொங்கல் வெற்றித் திரைப்படம் என்ற பேரை வாங்கியது மதகஜராஜா திரைப்படம் தான். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மனோபாலா, மணிவண்ணன் என பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம். 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சில பல பிரச்சினைகளால் வெளிவராமல் இருந்தது.
சுந்தர் சி மேஜிக்: ஒவ்வொரு வருடமும் இதற்கான ரிலீஸ் முயற்சியில் சுந்தர் சி ஈடுபட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆனால் எப்படியோ இந்த வருடம் மதகஜராஜா படம் வெளியானது. யாருமே எதிர்பார்க்காத வெற்றி. கடந்த வருடமும் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. அதுவும் கடந்த ஆண்டு வெளியான படங்களில் அரண்மனை 4 திரைப்படம்தான் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படமாக அமைந்தது.
அதை போல் இந்த வருடமும் சுந்தர் சியின் மதகஜராஜா திரைப்படம்தான் முதல் வெற்றிப்பெற்ற திரைப்படமாக மாறியிருக்கிறது. முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் கமெர்ஷியல் படங்களை கொடுத்து மக்கள் மனதில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் சமீபகாலமாக பல படங்களில் நடித்தும் வருகிறார்.
விஷாலுக்கு பெரிய வெற்றி: மதகஜராஜா படத்தை பொறுத்தவரைக்கும் விஷாலுக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் படியாக விஷாலுக்கு எந்த படங்களும் சரிவர அமையவில்லை. 12 வருடத்திற்கு முன் நடித்த படமாக இருந்தாலும் இதன் மூலம் மீண்டும் விஷால் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மதகஜராஜா படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த வெற்றிவிழாவிற்கு சுந்தர்சி , விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி என பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது பேசிய விஷால் தன்னுடைய அடுத்தடுத்த லைன் அப் படங்களை பற்றியும் கூறியிருக்கிறார். அடுத்ததாக கவுதம் மேனனுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதன் பிறகு துப்பறிவாளன் 2 அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.