விஷாலோட மகுடம் டிரைலர் ரிலீஸ்!.. அப்பா மகனின் ஆக்ஷன், காமெடி அட்டகாசம்!..
விஷால் எழுதி, இயக்கி நடித்துள்ள மகுடம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், டிரைலரை யூடியூபில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் அடுத்த வெர்ஷன் போலவே இந்த டிரைலர் உருவாகியுள்ளது.
முத்துமணி மாலை பாடலுடன் இடம்பெறும் சண்டைக் காட்சிகள், துஷாரா விஜயன், அஞ்சலி என நடிகைகளின் அலப்பறை, ஹார்பரில் ஒரு குறிப்பிட்ட சரக்கை இறக்க விடாமல் லிங்கா விஷால் ஏன் தடுக்கிறார். மகனுக்கும் அப்பாவுக்கும் என்ன மோதல் வெடிக்கிறது என்பது தான் மகுடம் படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
இயக்குநராக விஷால் எந்தளவுக்கு மாஸ் காட்டப் போகிறார். நடிகர் விஷால் அப்பாவியாகவும் ஆக்ஷன் காட்சிகளிலும் டிரைலரில் அசத்துகிறார். ஆனால், அதே சமயம் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிரைலர் அளவுக்கு பக்காவாக இந்த மகுடம் டிரைலர் விஷுவலாகவும் மேக்கிங் அளவிலும் இல்லையே என்கிற உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது.
வழக்கமான ஆக்ஷன் படமாகவே மகுடம் உருவாகி இருந்தால் அடுத்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் விஷால் பலத்த அடி வாங்கி விடுவாரோ என்கிற எண்ணமும் எழுகிறது. மகுடம் டிரைலரை பொறுத்தவரை பெரிதாக ஈர்க்கும் அளவுக்கான காட்சிகள் இல்லை.