இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல.... விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட விஷ்ணு விஷால் !

 
vishnu vishal

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் விஷ்ணு விஷால் தான் ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கிட்டதட்ட நான்கு வருடங்களாக அந்த நோய்க்காக சிகிச்சை பெற்று மருந்து உட்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நாம் எத்தனை நாளுக்கு உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை என ஒரு விஷயத்தை கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆம் நடிகர் விஷ்ணு விஷால் ஆட்டோ இம்யூன் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் கண் எரிச்சல் மற்றும் முகம் வாய் உள்ளிட்டவற்றில் வறட்சி ஏற்படும் இதுதான் இந்த நோயின் அறிகுறி.

அத்துடன் உமிழ்நீர் மற்றும் கண்ணீர் சுரப்பிகளை பாதிக்கும் ஆட்டோ இம்யூன் நோய், கண்களிலும் வாயிலும் தொடர்ச்சியாக வறட்சி ஏற்பட்டு கண் பார்வையே போய்விடும் அபாயமும் ஏற்படும். இந்த நோய் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலுக்கு நன்மை செய்யும் கண்ணீர் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளையும் தாக்கி அழிக்கும் .

vishnu vishal

இந்நோய் உடலில் நீச்சத்து குறைவது , நீண்ட நேரம் மொபைல் அல்லது கணினி பார்ப்பது, வயது முதிர்ச்சி, ஏசி அறைகளில் இருப்பது, அல்லது சில மருந்துகளின் பக்க விளைவுகளால் இந்த நோய் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். விஷ்ணு விஷாலின் இந்த பேட்டி ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இந்த நோய் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது.

Tags

From Around the web