அழுக்கு ஷூ... அசிங்கப்படுத்திய நபர் - ரியல் கட்டா குஸ்தியா மாறிய விஷ்ணு விஷால் மனைவி!

 
vishnu vishal

 

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய மனைவி தனக்காக ரியல் கட்டா குஸ்தியாக மாறிய சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். நானும் என்னுடைய மனைவி ஜுவாலா கட்டாவும் இணைந்து ஹைதராபாத்தில் ஒரு வீடு ஒன்றை வாங்கி இருந்தோம். 

அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்து கொண்டிருந்தபோது ஒரு முறை நான் ஜிம்மிற்கு சென்று வீட்டிற்கு வரும்போது அந்த ஷூ அழுக்காக இருந்தது. அதை பார்த்த அந்த பில்டிங் ஓனர் இப்படி மோசமான அழுக்கு ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு உள்ளே வரக்கூடாது என்று என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டாரு

vishnu vishal wife

இது அழுக்கு ஷூ இல்லை நான் ஜிம்முக்கு போயிட்டு வெளியில நடந்து வந்ததால் இப்படி ஆயிடுச்சு. இன்னொரு டைம் இந்த மாதிரி நடக்காது அப்படின்னு எவ்ளோ சொல்லியும் கூட கேட்கவே இல்லை. அது ரொம்ப அவமானமா போச்சு. இந்த விஷயத்தை என்னோட மனைவியிடம் சொல்லும் போது அவங்க பயங்கர கோபப்பட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதோடு அந்த வீட்டோட சொசைட்டி குரூப்ல அந்த நபரை எச்சரித்தார்.

உடனே அந்த நபர்.... அவங்க உங்களோட கணவர் என்பது எனக்கு தெரியாது மேடம் மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்டார்.  அதற்கு என்னுடைய மனைவி அவர் என்னுடைய கணவர்... கணவர் இல்லை அது விஷயம் இல்லை. ஒரு நபரை எப்படி இவ்வளவு மோசமாக திட்டலாம் என லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் .

katta kusthi

அது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு அந்த சமயத்துல அவங்க அந்த அளவுக்கு என்ன கேர் டேக்  பண்ணி பார்த்துக்கிறாங்க என்று விஷ்ணு விஷால் மனைவி குறித்து பெருமையாக பேசினார். இந்த சம்பவத்தை வைத்து பார்த்தால் விஷ்ணு விஷாலின் மனைவி ஒரு நிமிடத்தில் அந்த நேரத்தில் கட்டா குஸ்தியாக மாறி இருப்பாரு போல என ரசிகர்கள் கூறி வருகிறார். 

Tags

From Around the web