Categories: Cinema News latest news

ரசிகர்களை விட்டு விலகும் பிரபல நடிகர்..! ஷாக்கான நெட்டிசன்கள்..

நடிகர் விஷ்ணுவிசால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் தனது கருத்துக்களை பகிர்ந்து வரக்கூடிய நடிகர். தனது படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிரக்கூடியவர்.

இவர் தற்போது ஒரு அறிப்பை ஒன்றை வெளிய்யிட்டுள்ளார். அதில் நான் கொஞ்ச நாள் சோஷியல் மீடியாவில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சோஷியல் மீடியா மூலம் தான் ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு நல்ல இணக்கம் ஏற்படுகிறது.

அதிலிருந்து விலகுவதாக அறிவித்த இவரின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறுகையில் ஓய்வு எனபது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது.ஆதலால் தான் சோஷியல் மீடியாவில் இருந்து கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கப் போகிறேன் என கூறியுள்ளார்.

அவரின் அண்மையில் வெளிவந்த எஃப்.ஐ.ஆர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. ராட்சசன் படமும் திரையரங்கில் ஓடி நல்ல பேரை பெற்றுத் தந்தது. தற்சமயம் மோகந்தாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் திரைக்கு வரவிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini