Gatta Kusthi 2 Box Office : 10 நாட்களில் விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் இத்தனை கோடியா?
Jul 13, 2026, 07:53 IST
10 நாட்களில் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் தெரியவந்துள்ளது. விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடிகுழு, ஜீவா, கட்டா குஸ்தி, லால் சலாம்' என அடிக்கடி ஸ்போர்ட்ஸ் ஜானரை டிக் அடித்து படங்கள் பண்ணுபவர்.
இந்த லிஸ்டில் உள்ள 'கட்டா குஸ்தி' படம் 2022-ல் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆகையால், விஷ்ணு விஷால் இதன் பார்ட் 2-வை கையில் எடுத்து கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் களமிறக்கியிருக்கிறார்.
செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மகளாக பேபி சாரா நடித்திருக்கிறார்.
இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது, இந்த படம் கடந்த 10 நாட்களில் உலக அளவில் ரூ.42.80 கோடி வசூல் செய்துள்ளதாம்.
