Gatta Kusthi 2 Box Office : 2 வாரத்தில் விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் இத்தனை கோடியா?
Jul 17, 2026, 08:37 IST
14 நாட்களில் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் தெரியவந்துள்ளது. விஷ்ணு விஷால் நடித்திருக்கும் புது படம் 'கட்டா குஸ்தி 2'.
இந்த படம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருக்கிறார்.
இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார். மேலும், பேபி சாரா, ரம்யா கிருஷ்ணன், காளி வெங்கட், கருணாஸ், கருணாகரன், யோகி பாபு, ஶ்ரீஜா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படம் கடந்த 2 வாரத்தில் உலக அளவில் ரூ.48.28 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
