Gatta Kusthi 2 Box Office : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'!

 
Gatta Kusthi 2

16 நாட்களில் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் காமெடி டிராமா ஜானரில் 2022-ல் ரிலீஸ் ஆன படம் தான் 'கட்டா குஸ்தி'.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்த இந்த படத்தை ரசிகர்கள் வெற்றி படமாக்கி விட்டார்கள். ஒரு வெற்றி படம் கிடைத்தால் சும்மா விடுவார்களா ஹீரோக்கள்.

பார்ட் 2-வை எடுத்து கடந்த ஜூலை 3-ஆம் தேதி ரிலீஸ் செய்தார் விஷ்ணு விஷால். முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு தான் இதையும் இயக்கியிருக்கிறார்.

ஹீரோயினும் ஐஸ்வர்யா லக்ஷ்மியே தான். விஷ்ணு - ஐஸுவின் செல்ல மகளாக பேபி சாரா நடித்துள்ளார். ரசிகர்களிடையே அப்ளாஸ் வாங்கி வரும் இப்படம் கடந்த 16 நாட்களில் உலக அளவில் ரூ.50.60 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.

From Around the web