Gatta Kusthi 2 Box Office : 5 நாட்களில் விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
5 நாட்களில் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் காமெடி டிராமா ஜானரில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் தான் 'கட்டா குஸ்தி 2'.
இதில் ஹீரோ, ஹீரோயினாக விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, இவர்களின் மகளாக பேபி சாரா நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், கஜராஜ், கருணாகரன், யோகி பாபு, ஶ்ரீஜா ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட் நடித்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தை போலவே இதையும் இயக்குநர் செல்லா அய்யாவு ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்து எடுத்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இதற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.25.64 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
