Gatta Kusthi 2 Box Office : 12 நாட்களில் விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
Gatta kusthi 2

12 நாட்களில் 'கட்டா குஸ்தி 2' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ரசிகர்களுக்கு தொடர்ந்து அவர்களை எண்டர்டெயின் செய்யும் படங்களை கொடுப்பது நடிகர் விஷ்ணு விஷாலின் வழக்கம். 

அப்படி அவர் இம்மாதம் ஜூலை 3-ஆம் தேதி கொடுத்திருக்கும் படம் தான் 'கட்டா குஸ்தி 2'. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் காமெடி டிராமா ஜானர் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.

நேற்று இப்படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து "செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்டர்டெயினர்" என்று பாராட்டியிருக்கிறார். 

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களின் லிஸ்டில் இணைந்திருக்கும் இந்த படம் வசூல் ரீதியாகவும் குறை வைக்கவில்லை. கடந்த 12 நாட்களில் உலக அளவில் ரூ.46.22 கோடி வசூல் செய்திருக்கிறது.

From Around the web