×

அப்படிப்போடு!.. காதலியை கரம் பிடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்... திருமண தேதி அறிவிப்பு.....

 
அப்படிப்போடு!.. காதலியை கரம் பிடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்... திருமண தேதி அறிவிப்பு.....

வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் 2018ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இதை தொடர்ந்து, விஷ்ணு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இணைந்து சுற்றி வந்தார். 

இதற்காக தான் விவகாரத்து செய்தார் என்ற செய்திகள் உலாவிய நிலையில், அவருடன் தனது உறவை உறுதி செய்தார். தொடர்ந்து, கடந்த வருடம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா  திருமணம் இந்த மாதம் ஏப்ரல் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்கு தேவை என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News